வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு!

published 7 months ago

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு!

கோவை: வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகம் வெள்ளிங்கிரி பக்தர்கள் பாத யாத்திரை சென்று சுயம்பு லிங்கத்தை வழிபடுவது வழக்கம். இதனிடையே கடந்த வாரம் வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் அடுத்தடுத்த பலியாகினர்.

இந்த சூழலில் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ரகுராமன் (வயது 60) என்பவர் வெள்ளியங்கிரி மலைக்கு பாத யாத்திரை சென்றார்.  5வது மலையில் ஏறிய போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனிடையே அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

வனத்துறையினர் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அவரது உடலை அடிவாரம் எடுத்து வந்து ஆலந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

அங்கு வந்த போலீசர் ரகுமானின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 

வெள்ளியங்கிரி மலைக்கு பாத யாத்திரை சென்ற பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சக பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe