கோவையில் பழங்கால கார் கண்காட்சி - துவக்கி வைத்த ஆட்சியர்...

published 5 hours ago

கோவையில் பழங்கால கார் கண்காட்சி -  துவக்கி வைத்த ஆட்சியர்...

கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளை கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் விழா நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இந்த ஆண்டு கோயம்புத்தூர் விழாவை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில் பழங்கால கார் கண்காட்சி நடைபெற்றது.இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்களை காட்சிப்படுத்தி உள்ளனர்.

இதில் சுதந்திரத்துக்கு முன் பயன்படுத்திய பல்வேறு வகையான கார்கள் முதல் கடந்த 1995-ம் ஆண்டு வரை இருந்த 100க்கும் மேற்பட்ட பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.பழைய மாடல் பென்ஸ், செவர்லே, ஃபோர்டு, பத்மினி, அம்பாசடர் வோக்ஸ்வேகன், பழைய ஜீப் உள்ளிட்ட கார்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியை சுற்றி வலம் வந்தன.

திடீரென பழைய கார்கள் அணிவகுத்து சென்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe