கோவையில் 7000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்...

published 2 weeks ago

கோவையில் 7000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்...

கோவை: சென்னையில் முதலமைச்சர் ஆதிதிராவிடர், பழங்குடியினர்,  பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கியதையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட அதிகாரிகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

 

அதன் ஒரு பகுதியாக, கோவையில் நவஇந்தியா  பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், துணைமேயர் வெற்றிச்செல்வன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறுகையில், தமிழ்நாடு இந்தியா அளவில் முன்னிலை மாநிலமாக இருக்கிறது என்றால், தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களால் தமிழ்நாடு சமூக நீதி அடைந்த மாநிலமாக இருப்பதே காரணம் என்று கூறினார். மாநகரின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்குதாரர்களாக தூய்மை பணியாளர்கள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பம் கொண்டு வருவதன் மூலம்  தூய்மை பணியாளர்கள் சந்திக்கும் சிரமங்கள் குறைக்க முடியும் என்று கூறினார். அத்தகைய தொழில்நுட்பத்தை கொண்டு வந்து தூய்மை பணியாளர்களையே தொழில் முனைவோர்களாக மாற்றக் கூடிய வகையிலான சிறப்பான திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று துவங்கி வைத்திருப்பதாக கூறினார்.

இவ்விழாவில் 7000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்வின் போது, மருத்துவ முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் மகளிர் குழு கூட்டமைப்பு சார்பில் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe