கோவையில் நாளை மேஜிக் ஷோ: எங்கு? எப்போது?

published 6 days ago

கோவையில் நாளை மேஜிக் ஷோ: எங்கு? எப்போது?

கோவை: இந்திய மாயாஜால பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக கோவையில் நாளை மேஜிக் ஷோ நடைபெற உள்ளது.

இந்திய மாயாஜால பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக "IMHA 55" மேஜிக் பீஸ்ட்-2024 என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு கூட்டமும் ஜூனியர், சீனியர் மெஜிசியன்களுக்கு உண்டான தேசிய அளவிலான  போட்டிகளும் வின்சென்ட் ரோட்டில் உள்ள நல்ல ஆயன் சமூகக்கூடத்தில் நடைபெறுகிறது.

நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் இந்தியாவிலிருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா டெல்லி,  கோவா ஆகிய மாநிலங்களிலிருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட மேஜிசியன் கலந்து கொள்கின்றனர்.

போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுத்தொகைகளும், அப்பாதுரை நினைவு மற்றும் சூப்பர் செல்வம் நினைவு கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.

மேலும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை மாயாஜால நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சிறப்பு விருந்தினர்களாக முரளி (கனகலட்சுமி டைமண்ட்ஸ்) காவல் துணை ஆணையர்கள் முருகேசன், சேகர், காவல் ஆய்வாளர் ஆனந்த ஜோதி மற்றும் இந்திய மாயாஜால சங்கத்தின் தலைவர் நந்தகுமார், பொதுச் செயலாளர் பிரகாஷ் சவுக்கூர், பொருளாளர் மிருணாளினி அமர் ஆகியோர் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மேஜிக் ஷோவுக்கு ரூ.199 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவிற்கு 9585113106, 9360015131 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe