AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் இழக்க எத்தனை ஆண்டுகள் ஆகலாம்?- கோவையில் அமைச்சர் பிடிஆர் கூறிய தகவல்...

published 4 days ago

AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் இழக்க எத்தனை ஆண்டுகள் ஆகலாம்?- கோவையில் அமைச்சர் பிடிஆர் கூறிய தகவல்...

கோவை: கோவை கிக்கானிக் பாலம் அருகே, தனியார் செயற்கை நுண்ணறிவு(AI) சிறப்பு மையத்தினை தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். 
பின்னர் அந்த ஏ.ஐ நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்து ஆலோசித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  கடந்த ஆட்சியாளர்கள் அப்படியே போட்டு சென்ற கோவை எல்காட்டை ,
உச்சநீதிமன்றம் வரை சென்று திறந்துள்ளோம் என்றார். இந்த துறைக்கு பொறுப்பேற்ற பின்னர் 
மாதம் ஒரு முறை வெளிநாடு சென்று மார்கெட் செய்து தமிழகத்திற்கு நிறுவனங்களை ஈர்த்து வருவதாக தெரிவித்தார்.
கோவையில் சென்னை அளவிற்கு ஐடி நிறுவனங்களை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.
தமிழகத்தில் குளோபல் பின்சிட்டி போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும்,
டைடல், மினி டைடல் பார்க்குகளின் செயல்பாடு
நன்றாக இருக்கின்றது என தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் எல்காட்,சிப்காட் மூலம் பல்வேறு இடங்களில் புதிய கட்டிட்டங்களுக்கு 
நிலம் ஒதுக்கி கட்டிடம் கட்டாமல் இருக்கின்றனர் என கூறிய அவர்  ஆளும் கட்சியாக திமுக வந்த பின் அவற்றை ஆய்வு செய்து கட்டுவதற்கு ஆரமித்து இருக்கின்றோம் என தெரிவித்தார்.

தமிழகத்தில் திறன் அதிகளவில் இருக்கின்றது என கூறிய அமைச்சர் 6 % மக்கள் தொகை இருக்கும் ஊரில் 
20 %  உற்பத்திக்கான திறன் உள்ளவர்களை  நாம் உருவாக்குகின்றோம் என தெரிவித்தார். துபாய் போன்ற நாடுகளில் உள்ளது போல கோவையிலும் செயற்கை நுண்ணறிவு மாடல்கள் உருவாகப்பட வேண்டும் என தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவால் வேலை வாய்ப்பு  இழப்பு ஏற்படவே  20 ஆண்டுகளுக்கும் மேலாகும்,இந்த AI துறையில் நாம் இப்போதுதான் 5 ம் வகுப்பில் இருப்பதாக குறிபிட்டார். இப்போதைக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும்
மனிதன் கண்ணில் பார்க்கும் அளவிற்கு இயந்திரத்திற்கு தகவல்களை கொண்டு செல்லவே பல மணிநேரங்கள் ஆகும் என்றார்.
சர்வதேச நிறுவனங்கள் தமிழகத்திற்கு வர தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

ஓவ்வொரு நகரத்திற்கும் ஒரு வாய்ப்பு இருக்கும் என்றும்
இந்தியாவிற்கு மென்பொருள் துறையில்  அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது என்றார். உலக அளவில் இந்த துறையில் அளவில்லா வாய்ப்புகள் கொட்டிக்கிடங்கின்றது எனவும்,சீனாவில் இருந்து எல்லோரும் வெளியே வருகின்றனர்,
இங்கு மனிதவளம் இருக்கின்றது என குறிப்பிட்ட அமைச்சர்  உலக அளவில் அளவில்லா வாய்ப்பு இருக்கின்றது என்றார். 
செயற்கை நுண்ணறிவு துறையில் இலக்கை அடைய நிறைய முதலீடுகள் தேவை என்றார். ஒன்றிய அரசிடம்  நிதி , திறன் இருக்கின்றது என கூறுய அவர் அவர்களுடன் இணைந்து செயல்படுகின்றோம் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe