மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறுவப்பட்ட சிலை சேதம்...

published 5 hours ago

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறுவப்பட்ட சிலை சேதம்...

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் பழைய நுழைவு வாயில் எதிரில் சிறிய ரவுண்டானா உள்ளது. இதில் உயர் கோபுர மின்விளக்கு மற்றும் சிறிய பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த ரவுண்டானாவில் கடந்த 12ம் தேதி பெண் குழந்தை ல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நினைவுச் சன்னம் அமைக்கப்பட்டது.
உலக உருண்டை, அதன் அருகில் புத்தகங்கள் இருப்பது போன்றும் அதில் சிறுமி ஏறி செல்வது போன்றும் அந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு இருந்தது. 


 

இந்த நிலையில் நேற்று இரவு நினைவுச் சின்னத்தில் இருந்த சிறுமியின் சிலையை அந்தப் பகுதியில் சுத்திய மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் உடைத்து வீசியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் உடனடியாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. 
ரோந்து சென்ற போலீசார் உடனடியாக மனநிலை பாதிக்கப்பட்ட அந்த வாலிபரை பிடித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அந்தப் பகுதியில் சுற்றி தெரியும் 40 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் இரவு நேரங்களில் அங்கேயே படுத்து தூங்குவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் சிறுமியின் சிலையை உடைத்து வீசியதாக கூறப்படுகிறது. 

இரவு முழுவதும் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த அவரை மனநல காப்பகத்தில் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். சிலை உடைப்பு சம்பவம் மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வேறு சிலையை செய்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe