கோவையில் மாணவர்கள் அறையில் திடீர் சோதனை- காரணம் என்ன..?

published 4 hours ago

கோவையில் மாணவர்கள் அறையில் திடீர் சோதனை- காரணம் என்ன..?

கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் அதிகாலை மாணவர்கள் அறைகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தகுதி இருந்த விடுதிகள் மற்றும் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் கைப்பற்றப்பட்டது. அதேபோல சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கி இருந்தவர்களையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

இருந்த போதும் கோவை மாநகரில் போதைப் பொருள்களின் நடமாட்டம் பல்வேறு விதமாக இருந்து வருகிறது. குறிப்பாக கஞ்சா , மெத்தடைமைன், உள்ளிட்ட போதை பொருளகளின் பழக்கம் கல்லூரி மாணவர்களிடையே அதிகமாக பரவி வருகிறது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு போதை பொருட்கள் விற்பவர்களை கைது செய்தாலும் புதிது புதிதாக போதைப் பொருள்களை விற்கும் ஆட்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். 

இதனால் மாணவர்களிடம் போதை பொருட்களின் புழக்கம் இருந்து கொண்டே வருகிறது.

இதையடுத்து போலீசார் குனியமுத்தூர், போத்தனூர், கோவைப்புதூர், உக்கடம், சரவணம்பட்டி ஆகிய இடங்களில் வெளியூரிலிருந்து கோவைக்கு வந்து தங்கி படித்து வரும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு சென்று வரும் நபர்கள் அறைகளில் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து இன்று காலை 4.00 மணியளவில் சரவணம்பட்டி பகுதிகளில் சிங்காநல்லூர் உதவி கமிஷனர் வேல்முருகன் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 6 எஸ்.ஐ.க்கள் மற்றும் 72 போலீசார் மாணவர்கள்,  இளைஞர்கள் வசித்து வரும் அறைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
 

அப்போது அங்கு தடை செய்யப்பட்ட போதை  பொருட்கள், ஆயுதங்கள் ஏதேனும் இருக்கின்றதா, மாணவர்களின் போர்வையில் சட்டவிரோதமாக யாராவது தங்கி இருக்கிறார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி சோதனை மேற்கொண்டனர். 8.00 மணி வரை நடந்த சோதனையில் சந்தேகம்படும் படி நபரோ, பொருட்களோ எதுவும் சிக்கவில்லை.

அதிகாலை போலீசார் நடத்திய இந்த சோதனையால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe