நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மக்கள் யார் பக்கம்! Newsclouds சர்வே முடிவுகள்!

published 1 year ago

நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மக்கள் யார் பக்கம்!  Newsclouds சர்வே முடிவுகள்!

கோவை: நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மக்கள் யார் பக்கம் என்ற தலைப்பில் நியூஸ் க்ளவுட்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் அரசியல் கட்சியினர் கூட்டணி குறித்த முடிவு எடுக்கத் தொடங்கிவிட்டனர். சில கட்சியினர் தங்களது வேட்பாளர்களையே முடிவு செய்துவிட்டனர்.

இதனிடையே வரும் தேர்தலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் எந்த கட்சிக்கு வாய்ப்பு உள்ளது என்பது தொடர்பாக "நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மக்கள் யார் பக்கம்?" என்ற தலைப்பில் நியூஸ் க்ளவுட்ஸ் செய்தித்தளம் கருத்துக் கணிப்பை நடத்தியது.

அந்த சர்வே முடிவுகள் பின்வருமாறு:-

நியூஸ் க்ளவுட்ஸ் செய்தித்தளத்தின் 20 வாட்ஸ் ஆப் குழுக்கள், வாட்ஸ் அப் சேனல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் இந்த சர்வே நடத்தப்பட்டது.

இதில்,
தி.மு.க., கூட்டணி,
அ.தி.மு.க., கூட்டணி,
பா.ஜ.க., கூட்டணி
நாம் தமிழர் கட்சி
மற்றவை



என மொத்தம் 4 தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சர்வேயில் மொத்தம் 1,596 பேர் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இதில் "மற்றவை" என்ற தேர்வை 57 பேர் தேர்வு செய்துள்ளனர். " நா.த.க.," என்பதை 89 பேர் தேர்வு செய்துள்ளனர். "அ.தி.மு.க., கூட்டணி" என்பதை 194 பேர் தேர்வு செய்துள்ளனர்.

"தி.மு.க.," கூட்டணியை 593 பேர் தேர்வு செய்துள்ளனர். "பா.ஜ.க.," கூட்டணியை 663 பேர் தேர்வு செய்துள்ளனர்.

மொத்த வாக்குகளில், பா,ஜ,க., 41.5% பெற்று முதலிடத்திலும், 37.2% வாக்குகள் பெற்று தி.மு.க., இரண்டாம் இடத்திலும், 12.2% வாக்குகள் பெற்று அ.தி.மு.க., மூன்றாம் இடத்திலும்,  5.6% வாக்குகள் பெற்று நா.த.க.,  நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன. மற்ற கட்சிகள் என 3.6% மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கோவையில் ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் தெற்கு தொகுதியில் பா.ஜ.க., வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணியில் இருந்ததால் தான் வெற்றி பெற முடிந்தது என்று கலவையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வந்த நிலையில், கட்சியின் செல்வாக்கு கோவையில் அதிகரித்து வந்தது.

இதனிடையே நியூஸ் க்ளவுட்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க.,வின் செல்வாக்கு கோவையில் அதிகரித்திருப்பது தெளிவாகிறது.

நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும்  நடத்தப்பட்ட இந்த சர்வேயின் தரவுகளை நியூஸ் க்ளவுட்ஸ் தளம் சேமித்து வைத்துள்ளது என்பதை மக்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

நன்றி,
நியூஸ் க்ளவுட்ஸ் குழு.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe