தற்போது பிற மொழி ஆதிக்கங்கள் அதிகமாகவிட்டது- கோவையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவிப்பு...

published 21 hours ago

தற்போது பிற மொழி ஆதிக்கங்கள் அதிகமாகவிட்டது- கோவையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவிப்பு...

இதனை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். முன்னதாக உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்படு  தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் விழா பேருரையாற்றிய அமைச்சர் சாமிநாதன், கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு அனைவருக்கும் நினைவிருக்கும் என தெரிவித்தார். அன்றைய நாளில் கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் கூட அன்றைக்கு பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்களிடம் தமிழை செம்மொழியாக அந்தஸ்து பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அதற்கான அரசாணை வழங்கப்பட்டதை குறிப்பிட்டார்.

கலைஞர் முன்னெடுத்த இந்தி திணிப்பு சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில்  தானும் பங்கு பெற்று சிறைவாசம் சென்றதாக தெரிவித்தார். பேரறிஞர் அண்ணா கலைஞர் எல்லாம் தமிழை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அதன்படி தமிழக முதலமைச்சர் பல்வேறு வழிகளில் இந்த துறை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.

தமிழ் மொழி அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர் தற்போதைய காலகட்டத்தில் பிறப் மொழிகளின் ஆதிக்கங்கள் அதிகரித்து விட்டதாகவும் வணிக வளாகங்களில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழியை விட ஆங்கிலம் போன்ற மொழிகளே ஆதிக்கம் செலுத்தி வருவதாக கூறினார். 

அதுமட்டுமின்றி ஒன்றிய அரசு மூன்றாவது முறையையும் திணிப்பதற்கு துடித்துக் கொண்டே இருப்பதாகவும் இத்தகைய சூழலில் மீண்டும் நம்முடைய தமிழ் மொழிக்கான போராட்டம் நடைபெறுவதாக சுட்டிக்காட்டினார். நம்முடைய தாயை எவ்வளவு மதிக்கிறோம் அதனை விட நம்முடைய தாய் மொழியை நாம் மதிக்க வேண்டும் எனவும் நம்முடைய தாய்மொழியை பாதுகாப்போம் என்றும் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவோம் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் கோவை மாநகராட்சி மேயர் துணை மேயர் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe