இந்து முன்னனி தலைவர் விசாரணைக்கு ஆஜரான நிலையில் மீண்டும் வழக்குப்பதிவு- காரணம் என்ன..?

published 1 day ago

இந்து முன்னனி தலைவர் விசாரணைக்கு ஆஜரான நிலையில் மீண்டும் வழக்குப்பதிவு- காரணம் என்ன..?

கோவை: கோவை குண்டுவெடிப்பு தினத்தையொட்டி கடந்த 14 ம் தேதி பா.ஜ.க சார்பில் ஆர்.எஸ் புரத்தில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் இரு தரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக  ஆர்.எஸ் புரம் போலீசார் காடேஸ்வரா சுப்ரமணியத்தின் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

அத்துடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பினர். இதை தொடர்ந்து கடந்த திங்கள் மாலை அவர் ஆர்.எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மறுநாள் மீண்டும் ஆஜராகும் படி போலீசார் காடேஸ்வரா சுப்ரமணியத்திடம் தெரிவித்து இருந்தனர்.

அதன் படி அவர் நேற்று முன்தினம் ஆர்.எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அப்போது அவருடன் இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க., வினர் என பலர் போலீஸ் நிலையம் முன் திரண்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து போலீசார் மீண்டும் காடேஸ்வரா சுப்ரமணியம், பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த தசரதன், கிஷோர், சதீஷ், பாபா கிருஷ்ணன், பாலன், ஜெய் சங்கர், மகேஷ்வரன், முரளி, விஜயகுமார் ஆகிய 11 பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், போக்குவரத்து பாதிப்பு, அனுமதியின்றி கூடுதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe