கொங்குநாடு ஸ்பெஷல் தயிர் குழம்பு ரெசிபி..!

published 1 year ago

கொங்குநாடு ஸ்பெஷல் தயிர் குழம்பு ரெசிபி..!

கொங்குநாடு தயிர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பூசணியை வேக வைக்க...

வெள்ளை பூசணி - 2 கப்

உப்பு - 1/4 டீஸ்பூன்

தண்ணீர் - 1 கப்

மசாலாவிற்கு...

துருவிய தேங்காய் - 1/4 கப்

பச்சை மிளகாய் - 1

வரமிளகாய் - 1

சீரகம் - 1/2 டீஸ்பூன்

மல்லி - 3/4 டீஸ்பூன்

பூண்டு - 2 பல்

இஞ்சி - 1/4 இன்ச்

தாளிப்பதற்கு...

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை-சிறிது

வரமிளகாய் - 2

வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)

பிற பொருட்கள்...

தயிர் - 500 மிலி

உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் வெள்ளை பூசணியை ஒரு * பாத்திரத்தில் போட்டு, அதில் 1 கப் நீரை ஊற்றி, 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, பூசணியை குளிர வைக்க வேண்டும்.

பின்னர் மிக்சர் ஜாரில், தேங்காய், பச்சை மிளகாய், வரமிளகாய், சீரகம், மல்லி, பூண்டு, இஞ்சி சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்து, அதில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதில் வேக வைத்துள்ள வெள்ளை பூசணியை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும், அதை தயிர் கலவையுடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறினால், சுவையான கொங்குநாடு தயிர் குழம்பு தயார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago