கோவையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிப்பு…

published 1 day ago

கோவையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிப்பு…

கோவை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தொடர்பாக தமிழக எம்.பி க்கள் கேள்விகளை முன் வைத்தனர். 

அதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணைக்கப்படுகிறது என்பது தவறானது.
தமிழக எம்.பி க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள் என்று பேசினார்.

தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சுக்கு,  கோவையில் தி.மு.க சார்பில் உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை முன்பு, மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி, பெட்ரோல் ஊற்றி தர்மேந்திர பிரதானி உருவ பொம்மையை எரித்து, கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

கோவை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தி.மு.க வினர் பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago