தேசிய நெடுஞ்சாலைக்கு விவசாய நிலங்களை எடுப்பதா?- விவசாயிகள் கண்டனம்...

published 1 day ago

தேசிய நெடுஞ்சாலைக்கு விவசாய நிலங்களை எடுப்பதா?- விவசாயிகள் கண்டனம்...

கோவை: கோவை- சத்தியமங்கலம் இடையே புதிதாக சாலை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த நெடுஞ்சாலை துறையினர் முடிவெடுத்துள்ளதாகவும் அத்திட்டத்தை கைவிட கோரியும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

கோவை- சத்தியமங்கலம் வரை தற்பொழுது இரண்டு வழி சாலைகள் உள்ளது. அதற்கிடையே தற்போது கோவில்பாளையம் கணேசபுரம், கரியாம்பாளையம், அன்னூர் தெற்கு, பசூர் வரை நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் குரும்பபாளையம் முதல் சக்தி பன்னாரி வரை புதிதாக சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் அதனால் விவசாயம், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறியும் இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தனித்தனியாக கோரிக்கை மனு அளித்தனர். 

புளியகுளம் பகுதியில் உள்ள சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்த விவசாயிகள்  பேச்சுவார்த்தை நடத்தி மனு அளித்தனர்.

தற்பொழுது குரும்பபாளையம் முதல்  பன்னாரி வரை இரண்டு வழிச்சாலைகள் உள்ள நிலையில் அதனை விரிவுபடுத்துவதற்கான போதிய இடங்களில் சாலையை ஒட்டியே இருந்தும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சுமார் 2000 கோடி செலவழித்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் புதிதாக நான்கு வழி சாலைகள் அமைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

இது குறித்தான பேச்சு வார்த்தையில் மாவட்ட வருவாய் அலுவலரே நேரடியாக அந்த இடத்திற்கு வந்து  பார்வையிட உள்ளதாக தெரிவித்துள்ளார்கள் என கூறினர். தற்பொழுது புதிதாக போடப்பட்ட திட்டம் அவசியமற்ற திட்டம் என குறிப்பிட்ட விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தற்பொழுது உள்ள சாலையையே விரிவாக்கம் செய்யலாம் எனவும் தேவைப்படும் பட்சத்தில் ஆங்காங்கே உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கலாம் எனவும் கூறினர். 

மேற்கொண்டு இந்த 2000 கோடி செலவழித்து இந்த சாலையை அமைத்தால் அது யாருக்கும் உபயோகம் படாது என தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago