கோவையில் காட்டு மாடு தாக்கி வனக்காவலர் உயிரிழப்பு…

published 6 hours ago

கோவையில் காட்டு மாடு தாக்கி வனக்காவலர் உயிரிழப்பு…

கோவை: கோவையில் காட்டு மாடு தாக்கி வனக்காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

கோவையில் கடந்த 10-ம் தேதி மாலை,  தடாகம் வன எல்லைக்கு உட்பட்ட, தோலம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் வனத்துறை அதிகாரிகள் ஒரு காட்டு மாட்டை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

​​அப்போது அந்த காட்டுமாடு தோலம்பாளையம்  வனக் காவலர் அசோக் குமாரைத் தாக்கியதில் அசோக்குமார் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்ட வனத்துறையினர் படுகாயமடைந்த அசோக்குமாருக்கு சீலியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக  கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..

இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு வனத்துறை மத்தியிலும் உறவினர்கள் மத்தியிலம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago