முதல்வர் மருந்தகம் திறப்பு- கோவையில் எத்தனை என்ற விவரங்கள் இதோ...

published 2 weeks ago

முதல்வர் மருந்தகம் திறப்பு- கோவையில் எத்தனை என்ற விவரங்கள் இதோ...

கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சுதந்திர தின விழாவில் பொதுமக்கள் குறைந்த விலையில் மருந்துகளை வாங்கி பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகம் அமைக்கப்படும் என அறிவித்தார். 

அதன்படி இன்று முதலமைச்சர் மக்களுக்கு பொது மருந்துகளையும்பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு தொழில் முனைவோர்களுக்கு தலா ரூ.3 லட்சமும், கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.2 இலட்சமும் மானியமாக வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தில் கோயம்புத்தூர் மண்டலத்தில் தொழில் முனைவோர்கள் மூலம் 20 முதல்வர் மருந்தகமும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் 22 முதல்வர் மருந்தகமும் ஆக மொத்தம் 42 முதல்வர் மருந்தகங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்த மருந்தகங்களுக்கு ரூ.52 இலட்சம் மதிப்புள்ள ஜெனரிக் மற்றும் கம்பெனி மருந்துகள் சிந்தாமணி மாவட்ட மருந்து கிடங்கில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது.

இந்த மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகளும் அனைத்து வகையான கம்பெனி மருந்துகளும் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது மேலும் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேவைப்படும் மருந்துகள் உடனுக்குடன் பெற்று கொள்ளலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago