கோவை நகரில் இருந்து வெளியேறாத ரவுடி கைது…

published 3 weeks ago

கோவை நகரில் இருந்து வெளியேறாத ரவுடி கைது…

கோவை: கோவையில் போலீஸ் கமிஷனர் உத்தரவை மீறி நகரில் இருந்து வெளியேறாத ரவுடி கைது செய்யப்பட்டார்.
கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, நகரில் தொடர்ந்து வழிப்பறி, அடிதடி, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்கள் செய்பவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்தனர். இதன் மூலம் 83 பேர் ரவுடி பட்டியலில் உள்ளது தெரியவந்தது. இவர்களால் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில், நகரில் இருந்து 6 மாதங்களுக்கு இந்த 83 ரவுடிகளும் வெளியேற வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. 

மேலும் அவர்கள் வெளியேறி சென்று விட்டனரா? அல்லது நகருக்குள் உள்ளனரா? மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனரா? என கண்காணித்தனர். இந்நிலையில், காட்டூர் செங்குப்தா தெருவில் நேற்று நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சவுரிமுத்து(33) என்பவர் இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் மது குடிக்க பணம் கேட்டார். கொடுக்க மறுத்ததால் கத்தி முனையில் மிரட்டி சவுரிமுத்துவிடம் இருந்து ரூ. 450 ஐ பறித்து சென்றார். இது குறித்து சவுரிமுத்து காட்டூர் போலீசில் புகார் அளித்தார். 

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வியாபாரியை மிரட்டி பணம் பறித்தது காட்டூர் பட்டேல் ரோட்டை சேர்ந்த சசிக்குமார்(45) என்பது தெரியவந்தது. மேலும் மெட்ராஸ் சிட்டி போலீஸ் பிரிவு 51(ஏ) பிரிவின் கீழ் நகரில் இருந்து வெளியேற உத்தரவு பிறப்பித்த 83 ரவுடிகளில் ஒருவர் ஆவார். ஆனால் அவர் வெளியேறாமல் நகருக்குள் இருந்து தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் சசிக்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago