கோவையில் சமத்துவ கூடத்திற்குள் குடியும் குடித்தனுமும்..! சுத்தம் செய்து தரக் கோரும் கவுன்சிலர்

published 2 years ago

கோவையில் சமத்துவ கூடத்திற்குள் குடியும் குடித்தனுமும்..! சுத்தம் செய்து தரக் கோரும் கவுன்சிலர்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை : செல்வபுரம் பகுதியில் பராமரிக்கப்படாமல் இருந்த சமத்துக்கூடத்தை ஆய்வு செய்த 78வது வார்டு கவுன்சிலர் அதனைச் சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கோவை மாநகராட்சி 78வது வட்டத்துக்குட்பட்ட, செல்வபுரத்தை அடுத்த ஐடியூபி காலனி பகுதியில் சமத்துவக்கூடம் உள்ளது. கடந்த 6 வருடமாக பராமரிப்பின்றி இருந்த கூடத்தை சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக மாற்றினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கவுன்சிலரும், நகரமைப்புக்குழு உறுப்பினருமான சிவசக்தியிடம் புகார் தெரிவித்தனர். இன்று அந்த சமுதாயக்கூடத்தை ஆய்வு செய்த சிவசக்தி, சமுதாய கூடத்தை, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி, தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதனை  நேரில் சந்தித்து இதுகுறித்து தெரிவித்தார். புகாரின் பேரில் தனலட்சுமி ரங்கநாதன், அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு விரைவில் சமுதாயநலக்கூடம் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படும் என்று உறுதி அளித்தார். 
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe