திடீரென மூடப்பட்ட ஐடி நிறுவன விவகாரத்தில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை- பேச்சுவார்த்தையில் நடந்து என்ன?

published 3 days ago

திடீரென மூடப்பட்ட ஐடி நிறுவன விவகாரத்தில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை- பேச்சுவார்த்தையில் நடந்து என்ன?

கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் Focus EDUMATICS எனும் ஐடி நிறுவனம் மூடப்பட்ட விவகாரத்தில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர் நல அலுவலகத்தில் நடைபெற்ற இன்றைய தின பேச்சுவார்த்தையில் நிறுவனம் மற்றும் அரசு தொழிலாளர் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கலந்து கொண்ட CITU தொழில்சங்கத்தினர் பாதியில் வெளியேறினர்.
இந்த பேச்சுவார்த்தை க்கு 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வருகை புரிந்த நிலையில் குறிப்பிட்ட சில ஊழியர்கள், நிறுவன மேலாளர்கள், தொழில்துறை கூடுதல் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.


பணிக்கொடையை (கிராஜூவிட்டி) பணிபுரிந்த காலத்துக்கும், அனுபவத்துக்கும் ஏற்ப வழங்குவது, PF தொகையை பெறுவதற்கான அனுமதி உள்ளிட்ட விண்ணப்பங்களில் கையொப்பமிடுதல், பணியாளர்களின் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைத்தல், பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிக்கான செக்கை திரும்ப வழங்குதல்,உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

பேச்சுவார்த்தையில், 
ஒரு மாதம் சம்பளம், PF, ESI அனைத்தும் கொடுப்பதாக பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதில் அனைவருக்கும் சம்பந்தம் என்றால் பேச்சுவார்த்தை உடன்பாடு என கையெழுத்து போடப்படலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் சில சந்தேகங்கள் இருப்பதாக கூறி மீண்டும் அனைவரும் ஆணையாளரை சந்தித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஊழியர்கள், இழப்பீடு தருவதாக கூறியிருக்கிறார்கள் என்றும் ஆனால் தொகை குறித்து பேசவில்லை என தெரிவித்தனர். SL, EL தருவதாக கூறியிருப்பதாகவும் கிராட்ஜுவிட்டி குறித்து கேட்டதற்கு வருடத்திற்கு 15 நாட்கள் என்ற அடிப்படையில் கணக்கிட்டு வழங்குவதாக தெரிவித்துள்ளதாக கூறினர். Compensation பணம் அடுத்த வாரம் வந்துவிடும் என்று கூறியிருப்பதாக தெரிவித்தனர். மேலும் கடிதம் எழுதி கொடுத்து ஐடி கார்டை ஒப்படைத்து விட்டு தங்களது ஆவணங்களை பெற்று கொள்ளலாம் என கூறியதாக தெரிவித்தனர்.

முழு நேர பணியாளர்கள் இதனை ஏற்று கொண்டதாகவும் ஆனால் பகுதி நேர பணியாளர்களுக்கு எந்த முடிவும் பேசப்படாத நிலையில் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரிவித்தனர். இனிமேல் வெளிநாட்டில் இருந்து எதாவது ஒரு கம்பெனி வந்தால் அது பற்றி தெரிந்து கொண்டு பணிக்கு சேருங்கள் என்றும் எங்களை போன்று ஏமாந்து விட வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe