கோவையில் கோர விபத்து.. ஒருவர் பலி.. ஆயிரக்கணக்கான முட்டைகள் சேதம்

published 2 years ago

கோவையில் கோர விபத்து.. ஒருவர் பலி.. ஆயிரக்கணக்கான முட்டைகள் சேதம்

கோவை: ஈரோட்டில் இருந்து முட்டை ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று இன்று அதிகாலை கோவை வழியாக கேரளாவுக்கு சென்றது. இந்த லாரியில் டிரைவர் உள்பட 3 பேர் இருந்தனர். மினி லாரி அதிகாலை 4.30 மணியளவில் எல் அண்ட் டி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளலூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே கேரளாவில் இருந்து கோவை நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. வெள்ளலூர் பிரிவு அருகே எதிர்பாராத விதமாக 2 லாரிகளும் திடீரென நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதி கொண்டன.

இதில் முட்டை ஏற்றி வந்த லாரி சாலையை விட்டு விலகி அருகே இருந்த தரிசு நிலத்திற்குள் விழுந்து சுக்கு நூறாக அப்பளம் போல் நொறுங்கியது. இதில் வண்டியில் இருந்த ஆயிரக்கணக்கான முட்டைகள் உடைந்து ரோட்டில் கூழாக ஓடியது.

விபத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரியில் இருந்து டீசல் வெளியேறி சாலையில் ஓடியது. இதனால் சாலை முழுவதும் முட்டை ஓடுகளாகவும், டீசலாகவும் காணப்பட்டது. இந்த விபத்தை பார்த்ததும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் விபத்து குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சூலூர் போலீசார் தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும், உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது செல்லும் வழியிலேயே முட்டை ஏற்றி வந்த லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பெயர் கோபால கிருஷ்ணன், ஈரோட்டைச் சேர்ந்தவர். முட்டை லாரி கிளீனர் துரைசாமி, கண்டெய்னர் லாரி டிரைவர் வடமாநிலத்தைச் சேர்ந்த நித்திஸ், கிளீனர் தீபக் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe