கோவை வன மரபியல் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்- மத்திய அமைச்சர் அதிகாரிகள் வருகை...

published 5 days ago

கோவை வன மரபியல் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்- மத்திய அமைச்சர் அதிகாரிகள் வருகை...

கோவை: கோவை தடாகம் சாலையில் உள்ள மாநில வன பணிக்கான மத்திய உயர்ப் பயிற்சியக, வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவன வளாகத்தில் இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்ற ஆலோசனை குழு கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் கலந்து கொண்டுள்ளார்.

இக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் கீர்த்திவர்தான் சிங் மற்றும் நாடாளுமன்ற ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக பயிற்சியக வளாகத்தில் மத்திய அமைச்சர் அவர்கள் "அம்மாவின் பெயரில் ஒரு மரம்" எனும் திட்டத்தின் கீழ் தனது தாயின் பெயரில் மரக்கன்று நட்டு வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் தலைமையில் நாடாளுமன்ற ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வன நிலப்பரப்பு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் மற்றும் திட்டங்களின் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe