நீர்பிடிப்பு பகுதியில் மழை சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

published 2 years ago

நீர்பிடிப்பு பகுதியில் மழை சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கோவை: கோவை மாநகரில் 26 வாா்டுகள், நகரையொட்டியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குப் பிரதான குடிநீா் ஆதாரமாகச் சிறுவாணி அணை விளங்குகிறது.

சிறுவாணி அணையில் 45 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கக் கேரளா அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுமார் 10 கோடி லிட்டர் தண்ணீர் குடிநீருக்கு எடுக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தீவிரமாகும் தென்மேற்குப் பருவ மழையால், சிறுவாணி அணை முழுக்கொள்ளவான 878.50 மீட்டா் (49 அடி) நீர்மட்டத்தை எட்டும்.

இந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் 873 மீட்டராக இருந்த அணையின் நீர்மட்டம், ஜூலை முதல் ஆகஸ்டு வரை பெய்த தென்மேற்குப் பருவ மழையால் 876 மீட்டா் வரை உயர்ந்தது.

இதைத் தொடர்ந்து, செப்டம்பா் மாதத்தில் இடைவெளி விட்டு, சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், அணையின் நீர்மட்டமானது 877 மீட்டராக உயர்ந்தது.

இதையடுத்து, அணையிலிருந்து குடிநீருக்காக எடுக்கப்பட்ட தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாகச் சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.

இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 38 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் 42 அடி வரை நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe