கோவை அரசு மகளிர் கல்லூரியில் 11 புதிய பாடப் பிரிவுகள் துவக்கத் திட்டம்

published 1 year ago

கோவை அரசு மகளிர் கல்லூரியில் 11 புதிய பாடப் பிரிவுகள் துவக்கத் திட்டம்

கோவை: கோவை புலியகுளத்தில் அரசு மகளிர் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 650-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது இந்த கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல் உள்ளிட்ட படிப்புகள் கற்று கொடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்த கல்லூரியில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிதாக 11 பாடப்பிரிவுகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் வீரமணி கூறியதாவது:-

"தற்போது இந்த கல்லூரியில் புதிதாக 11 பாடப்பிரிவுகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 5 முதுநிலை படிப்புகளும், 6 இளநிலை படிப்புகளும் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி எம்.ஏ. தமிழ், எம்.ஏ. ஆங்கிலம், எம்.காம், எம்.எஸ்.சி. கனிணி அறிவியல், எம்.எஸ்.சி. கணிதம் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளும், பி.எஸ்.சி. அரசியல் அறிவியல், பி.எஸ்.சி. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளையும் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த கல்லூரி தற்போது 9 அறைகள் கொண்ட பழைய மாநகராட்சி பள்ளியில் இயங்கி வருகிறது. இங்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால் ஷிப்ட் முறையில் வகுப்புகளை நடத்தி வருகிறோம். இப்போது பி.ஜி. பாடத் திட்டங்களை தொடங்க எங்களிடம் போதுமான இடம் இல்லை. எனவே புதிய கட்டிடம் தயாரானதும் அங்கு புதிய படிப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும் அடுத்த ஆண்டுக்குள் கல்லூரிக்கு ஒரு புதிய கட்டிடம் கட்டப்படும். அதற்கு அரசு ரூ.13 கோடி ஒதுக்கியுள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe