ஆட்டோ டிரைவருக்கு சரமாரி கத்திக்குத்து; காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் கொடூரம்!

published 4 hours ago

ஆட்டோ டிரைவருக்கு சரமாரி கத்திக்குத்து; காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் கொடூரம்!

கோவை: கோவை, கணபதி அருகே உள்ள மூகாம்பிகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 61).

இவர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ ஓட்டி வருகிறார். 
இதே ஆட்டோ ஸ்டாண்டில் காந்திபுரம் 100 அடி ரோடு முதலாவது, தெருவைச் சேர்த்த பரசுராமன் (வயது 37) என்பவரும் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இந்த நிலையில் பரசுராமன் சீனிவாசனின் தங்கை மகன் ராஜன் என்பவர் உடன நண்பராக பழகி வந்துள்ளார். இது சீனிவாசனுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

தனது தங்கையின் மகன் வாழ்க்கையை பரசுராமன் கெடுத்து விட்டதாக நினைத்த சீனிவாசன், இதுகுறித்து பரசுராமன் ஓட்டி வரும் ஆட்டோ உரிமையாளரிடம் கூறியுள்ளார்.

இதனால் பரசுராமனிடம் இருந்து ஆட்டோவை உரிமையாளர் திருப்பி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இது பரசுராமனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

நேற்று மாலை சீனிவாசன் நஞ்சப்பா ரோட்டில் இருந்து காந்திபுரம் பஸ் நிறுத்தத்திற்கு சவாரி ஏற்றி சென்றார். அப்போது அங்கு வந்த பரசுராமன் தகராறு செய்துள்ளார்.

திடீரென்று சீனிவாசனை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் வயிறு மற்றும் கண் கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக கத்திக்குத்து விழுந்தது.

அலறிய சீனிவாசனை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். பொதுமக்கள் திரண்டதால் பரசுராமன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தொடர்ந்து சீனிவாசன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து சீனிவாசன் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தவ்லத் நிஷா வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe