காய்கறிகளை வெட்ட பிளாஸ்டி பலகைகளைப் பயன்படுத்துகிறீர்களா?

published 1 year ago

காய்கறிகளை வெட்ட பிளாஸ்டி பலகைகளைப் பயன்படுத்துகிறீர்களா?

நாம் தினமும் உபயோகிக்கும் பொருட்களை வாங்கும் போதும், அவற்றை பயன்படுத்தும் போதும் எப்போதும் கவனமாக இருப்பது அவசியம். நாம் செய்யும் சிறிய தவறு கூட பெரிய ஆபத்தில் முடிய நேரிடலாம்.

இப்போதைய பரபரப்பான உலகத்தில் எந்த வேலை செய்ய நேரிட்டாலும் அனைவரும் எளிமையான முறையையே நாம் விரும்புகிறோம். பிற முறைகளை விட நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் உணவு சார்ந்த சமையலறையில் பயன்படுத்தப்படும் கருவிகள், நம் வேலையை சுலபமாக்குவதை காட்டிலும் எளிமையானதாக மட்டும் அல்லாமல் நம் உடலுக்கு எந்த விதமான ஆபத்துகளை விளைவிக்கக் கூடும் என்பதையும் நாம்  அறிந்திருக்க வேண்டும்.

சமையலறையில் நாம் காய் வெட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் கட்டிங் போர்ட், நம் பட்ஜெட்டுக்கு ஏற்றவாரும், சுலபமாக பயன்படுத்தக்கூடியதாக இருப்பினும் அது பல வகை ஆபத்துகளுக்கு வழிவகுக்கலாம். இதுல என்ன ஆபத்து வந்துரப்போகுதுனு  நினைக்கறீங்களா...

நாம் பிளாஸ்டிக் கட்டிங் போர்டைப் பயன்படுத்தும்போது, ​​​​கத்தி நழுவி, பலகை நகரும் வாய்ப்புள்ளது. இது நம் கையைக் காயப்படுத்தலாம். கட்டிங் போர்டை சுத்தம் செய்யும் போதும் கவனமாக இருப்பது அவசியம். பிளாஸ்டிக் போர்டுகளை சோப்பு போடாமல் வெறும் தண்ணீரில் மட்டும் கழுவுவதால், அதன் மேற்பரப்பு வழுக்கி கத்தி நழுவ நேரிடும்.

மேலும் கட்டிங் போர்டு சுத்தமாக இல்லாவிட்டால், பல்வேறு கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும். எனவே பிளாஸ்டிக் போர்டை சோப்பு ஸ்க்ரப் செய்து கழுவி, தண்ணீர் வடியும் இடத்தில் வைக்க வேண்டும். எலுமிச்சம் பழத்தோலால் ஸ்க்ரப் செய்வது அல்லது உப்பு சேர்த்து தேய்ப்பது பலகையை சுத்தமாக வைத்திருக்க உதவும்.

பெரும்பாலான சமையல் அறைகளில், காய்கறிகள் வைக்கப்பட்டிருக்கும் தட்டுகளில் டைல்ஸ் போடப்பட்டிருக்கும். இந்த தட்டுகளில் பிளாஸ்டிக் வெட்டும் பலகையை ஈரத்துடன் வைக்கும் பொழுது ஈரம் சரியாக காயாமல் அந்த பலகை எளிதில் நழுவி விழுந்து நம் கால்களை பதம் பார்க்கக்கூடும். மேலும் ஈரம் காயாத பலகையில் பூஞ்சை ஏற்பட்டு அதை பயன்படுத்தும் பொழுது உடல் உபாதைகளை ஏற்படுத்தம். இதைத் தவிர்க்க, போர்டின் கீழ் பருத்தி துணி, டிஷ்யூ பேப்பர் அல்லது நழுவாத பாய் மீது வைக்கலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe