உக்கடம் மக்களே... வண்டி வேணும்னா எடுத்துருங்க... இல்லைன்னா பறிமுதல்!

published 2 weeks ago

உக்கடம் மக்களே... வண்டி வேணும்னா எடுத்துருங்க... இல்லைன்னா பறிமுதல்!

கோவை: உக்கடத்தில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உரிமையாளர்கள் உடனே அகற்ற வேண்டும் என்று, அந்த வாகனங்களில் போலீசார் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

கோவை உக்கடம் அல் அமீன்  காலனி மற்றும் ரோஸ் கார்டன் பகுதிகளில் குப்பைகள் அதிக அளவில் தேங்கியுள்ளன. அதோடு, பல நாட்களாக சிலர் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால், இடையூறு ஏற்படுவதாகவும், குப்பைகளையும், கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றக் கோரியும் குடியிருப்பு வாசிகள் சாலை மறியல் போராட்டம் அறிவித்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 

கோவை செய்திகளை அறிந்து கொள்ள நியூஸ் க்ளவுட்ஸ் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம்: https://chat.whatsapp.com/BXmMPbipm0H03OuHEeBQjR

தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள் குவிந்து கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில், வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்ற நோட்டீசை, சம்மந்தப்பட்ட வாகனங்களில் போலீசார் ஒட்டியுள்ளனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe