கண் ஆரோக்கியத்தையும் கூட உணவினால் பாதுகாத்துக்கலாமுங்க... தெரியுமா உங்களுக்கு...

published 1 year ago

கண் ஆரோக்கியத்தையும் கூட உணவினால் பாதுகாத்துக்கலாமுங்க... தெரியுமா உங்களுக்கு...

மழை காலம் வந்தாலே ஒரே டென்ஷன் தாங்க... நம்ம என்ன தான் தண்ணீர வெச்சு எல்லாத்தையும் கழுவி சுத்தம் செஞ்ஜாலும், இந்த தேவையில்லாத தொற்றுகளும் கிருமிகளும் வளருவதற்கும் பரவுவதற்கும் முக்கியமான ஊடகமாக இருப்பதும் இந்த தண்ணீர் தான். மழை நம்ம எல்லாரோட தண்ணீர் தேவைக்கும் அத்தியாவசிய ஒன்றுன்னாலும், மழை காலத்துல திறந்த வெளியுல தேங்குற தண்ணீரால பல விதமான வியாதிகள் ஏற்படுகின்றன.

மழைக்காலத்தில உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பொழுது நாம முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியது நம் கண்களின் ஆரோக்கியத்திலும் தான். நம் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதன் மூலமும், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமும், மட்ராஸ் ஐ-னு சொல்லப்பட்ற 'கன்ஜங்க்டிவிடிஸ்' போன்ற கண் நோய்த்தொற்றுகளைத் தடுக்க முடியும்.

நம் கண்களுடைய ஆரோக்கியத்தை உறுதி செய்யறதுகாக நாம சாப்பிட வேண்டிய சில 'சூப்பர்ஃபுட்'-களை தான் நாம இங்கே தெரிஞ்சுக்க போறோம்...

பப்பாளி: பப்பாளி வைட்டமின் சி நிறைந்த பழமாகும். இது ஒரு சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். அதாவது சில மூலக்கூறுகள் ஆக்ஸிஜன் வாயுவுடன் சேர்ந்து சிதைந்து போகாமல் இருக்க உதவுகிறது. இது கண்களின் இரத்த நாளங்களை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ப்ரோக்கோலி: கண்களின் விழித்திரை மற்றும் லென்ஸைப் பாதுகாக்கும் இரண்டு அத்தியாவசிய கரோட்டினாய்டுகளான 'லுடீன்' மற்றும் 'ஜியாக்சாந்தின்' ஆகும். இவ்விரண்டுக்குமான சிறந்த மூலமாக ப்ரோக்கோலி விளங்குகிறது.

சக்கரைவள்ளிக் கிழங்கு: இது வைட்டமின் ஏ-விற்கு முன்னோடியான பீட்டா கரோட்டின் என்ற மூலப்பொருள் நிறைந்தது. பீட்டா கரோட்டின் ஆரோக்கியமான பார்வையை பராமரிப்பதற்கான ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.

பரங்கிக்காய்: பரங்கிக்காயிலும் ஏராளமான பீட்டா கரோட்டின் உள்ளது. இது நம் உணவில் உள்ள வைட்டமின் ஏ-யை இரத்தத்தில் கலக்க உதவி ஆரோக்கியமான பார்வையை பராமரிக்கிறது.

சூரியகாந்தி விதைகள்: இவை வைட்டமின் ஈ மற்றும் துத்தநாக சத்தை அதிகமாகக் கொண்டுள்ளது. இந்த சத்துக்கள் கண்ணில் நோய் தொற்று ஏற்படுவதைத் தடுத்து, கண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சூரை மீன்: 'டூனா' எனக் அழைக்கப்படும் சூரை மீன் கொழுப்புச் சத்து நிறைந்த மீன் ஆகும். இது உடலுக்கு அதிக அளவிலான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை வழங்கி கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குகிறது.

தக்காளி: தக்காளி 'லைகோபீன்' என்ற ஆக்ஸிஜனேற்றிக்கான சிறந்த மூலமாகும். தக்காளியை நாம் தினமும் உணவில் சேர்ப்பதனால் நம் உடலுக்கு எண்ணற்ற பலன்கள் கிடைக்கின்றன.

பச்சை தேயிலை தேநீர்: 'கிரீன் டீ'-யில் 'கேடசின்' எனப்படும் ஆக்ஸிஜனேற்றி உள்ளது. பச்சை தேயிலை தேநீரைப் பருகுவது நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் நம் கண்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாங்பழம்: மாம்பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை தெளிவான பார்வையை பராமரிக்கவும், குறிப்பாக குறைந்த ஒளியே உள்ள சூழலில் பார்வையின் தெளிவை உறுதிபடுத்தவும் உதவுகிறது.

கண்ணு வலி வந்து அவதிப்படுவதற்கு முன்னரே இந்த உணவுகளை உண்டு நம் கண் ஆரோக்கியத்தை உறுதி செய்துகொண்டால் நல்லது தானே...!

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe