கோவையில் பள்ளி மாணவிகளுக்கான கிரிக்கெட் போட்டி...

published 1 day ago

கோவையில் பள்ளி மாணவிகளுக்கான  கிரிக்கெட் போட்டி...

கோவை: கோவை சாய்பாபாகாலனி அழகேசன் சாலையில் உள்ள டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியில் ராமலிங்க செட்டியார் மேல்நிலைப்பள்ளி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ ஜெயந்திரா சரஸ்வதி வித்யாலயம் பள்ளி என 4 அணிகள் போட்டியிடுகின்றன.

இந்த போட்டியை ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியின் செயலாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்து போட்டியில் பங்கேற்கும் மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 
கிரிக்கெட் போட்டி துவங்கியதும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் போட்டியில் விளையாடும் மாணவிகளை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
போட்டியின் நிறைவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.

பள்ளி மாணவிகள் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருவதாகவும் இனிவரும் நாட்களில் வரவேற்பும் ஆர்வமும் அதிகரிக்கும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe