கொங்கு மண்டலத்தில் முதல் முறையாக அதிநவீன அல்ட்ரா சவுண்டு ஸ்கேனிங் கருவி அறிமுகம்...

published 1 year ago

கொங்கு மண்டலத்தில் முதல் முறையாக அதிநவீன அல்ட்ரா சவுண்டு ஸ்கேனிங் கருவி அறிமுகம்...

கோவை: ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மையம் , கொங்கு மண்டலத்தில் முதன்முறையாக அதிநவீன அல்ட்ரா சவுண்ட் சாம்சங் வி7 கருவியை அறிமுகப்படுத்தியது.

இந்த கருவியின் சிறப்பம்சங்கள் குறித்து டாக்டர் ஆதித்யன் குகன் கூறியதாவது, இந்த ஸ்கேனிங் கருவி , துல்லியமான மருத்துவ ஆய்வுகளையும் மதிப்புமிக்க முடிவுகளை எடுப்பதற்கு உதவும் பல அம்சங்களை கொண்டுள்ளது.
வயிறு, இதயம் என பலவற்றைக் கண்டறிய அல்ட்ராசவுண்ட் இயந்திரங்கள் இருந்தாலும், வி 7 இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்யும். மேலும் இது 2D மற்றும்  வண்ணம் இரண்டிலும் அசாதாரண காட்சி-தெளிவை இந்த கருவி வழங்கும்.

'S-Shearwave Imaging' எனப்படும் மற்றொரு அம்சம், ஆல்கஹால் உள்ளிட்ட கல்லீரல் நோய்களின் N-எண்ணிக்கை மற்றும் கட்டுப்பாடற்ற நீரிழிவு, ஹெபடைடிஸ், கல்லீரலை பாதிக்கும் மருந்துகள், மோசமான வாழ்க்கை முறை போன்றவற்றால் ஏற்படும் கடினமான கல்லீரல் திசுக்களை சிரமமின்றி மதிப்பீடு செய்ய உதவும்.

இது போன்று 'NerveTrack with A.I.Technology', AutoIMT, S-Detect, S-Flow போன்ற பல அம்சங்கள் உள்ளன, என கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe