வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்…

published 1 year ago

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்…

கோவை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர், பொள்ளாச்சி சார் ஆட்சியர், மாநகராட்சி துணை ஆணையாளர் வருவாய் கோட்டாட்சியர்கள் உட்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் கோவை மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் விதமாக சார் ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை உரிய பணியாளர்களுடன் செயல்பட வேண்டும் எனவும் வெள்ளம் மற்றும் இதர இயற்கை இடர்பாடுகள் சம்பந்தமாக பெறப்படும் தகவல்களை உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள பாதுகாப்பு மையங்கள் திருமண மண்டபங்கள் பள்ளிகள் மற்றும் சத்துணவு கூட்டங்களை தேர்வு செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களை அங்கு தங்க வைக்க ஏதுவாக உரிய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தனித்தனி குழுக்கள் அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

கால்நடை இறப்பு நேர்வில் வட்டாட்சியர்கள் கால்நடை மருத்துவரின் இறப்பு மற்றும் பிரேத பரிசோதனை சான்றுடன் அறிக்கை அனுப்பிடவும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என தெரிவித்தார். மேலும் இடி மற்றும் மின்னல் ஏற்படும் நேரங்களில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை துண்டு பிரசுரங்கள் வாயிலாக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். 

மேலும் பட்டுப்போன மரங்களையும் மரக்கிளைகளையும் வெட்டி அகற்ற வேண்டும் எனவும் மழைக்காலங்களில் சாலைகளில் குழிகள் இருந்தால் அவைகளை உடனடியாக சரி செய்து விபத்து ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் வெள்ள சேதங்களின் பொழுது மீட்பு நடவடிக்கைகளுக்காக வாகனங்களையும் தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை பணியாளர்களையும் தயார் நிலையில் வைத்திருப்பது தண்ணீரை வெளியேற்ற தேவைப்படும் மோட்டார் மற்றும் அனைத்து இயந்திரங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

முன்னதாக இக்கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய துணை ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், முதல் நிலை வருவாய் ஆய்வாளர்கள், மின் மாவட்ட மேலாளர்கள் உள்ளிட்ட 32 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பணியினை பாராட்டி மாவட்ட ஆட்சியர் பாராட்டு கேடயத்தை வழங்கி கௌரவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe