10 நாட்களுக்கு முன் போடப்பட்ட புட்டுவிக்கி சாலை “புட்டுக்கிச்சு”.. மக்கள் ஆவேசம்..!

published 1 year ago

10 நாட்களுக்கு முன் போடப்பட்ட புட்டுவிக்கி சாலை “புட்டுக்கிச்சு”.. மக்கள் ஆவேசம்..!

கோவை: புட்டுவிக்கி சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு போடப்ட்ட சாலையில் லாரி ஒன்று புதைந்து விபத்துக்குள்ளனது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழுதடைந்த சாலைகள் துரித கதியில்  புனரமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மாநகராட்சிக்கு உட்பட்ட புட்டுவிக்கி சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தார் சாலை போடப்பட்து. 
நேற்று இரவு கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்த நிலையில் அந்த சாலை லேசாக சேதமடைந்திருந்தது. இந்நிலையில் இன்று காலை அவ்வழியாக செங்கல் லோடு ஏற்றிக் கொண்டு சென்றது. அப்போது லாரியின் முன்புற சக்கரம் சாலையில் புதைந்து லாரி சிக்கியது.

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 
சாலை தரமில்லாமல் போடப்பட்டதாலும் நேற்று பெய்த தொடர் மழையின் காரணமாகவும் லாரி சிக்கி கொண்டதாக தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் தரமான சாலையை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக போட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe