நயன்தாரா, ஜெய் மீது போலீசார் வழக்கு!

published 1 year ago

நயன்தாரா, ஜெய் மீது போலீசார் வழக்கு!

சென்னை: நயன்தாரா, ஜெய் உள்ளிட்டோர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகர் ஜெய் மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் ஓ.டி.டி தளத்திலும் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இதனிடையே இந்த திரைப்படத்தில் இந்து மத நம்பிக்கைகளை அவமதிக்கும் விதமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மும்பை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில்  நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe