76வது குடியரசு தினவிழா- தேசிய கொடியை பறக்கவிட்ட கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்...

published 1 day ago

76வது குடியரசு தினவிழா- தேசிய கொடியை பறக்கவிட்ட கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்...

கோவை: நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார்பாடி வ.உ.சி மைதானத்தில் தேசிய கொடியை பறக்கவிட்டார். தொடர்ந்து மூவண்ண பலூன்களை பறக்கவிட்டார்.பின்னர் சமாதானத்தை பசைசாற்றும் விதமாக வெண் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. 

 

பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அணி வகுப்பு நடத்திய அணித்தலைவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். மேலும் சுதந்திர போராட்ட தியாகியர், தியாகியர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்ப்பட்ட 142 அரசு அலுவலர்கள், 45 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களும், 61 மாநகர காவல்துறையினர், 34 மாவட்ட காவல்துறையினருக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கோவை சரக டிஐஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பல்வேறு பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe