ராமர் கோவில் கும்பாபிஷேகம்- கதிர்நாயக்கன் பாளையத்தில் தீப விளக்கு ஏந்தி பெண்கள் ஊர்வலம்...

published 1 year ago

ராமர் கோவில் கும்பாபிஷேகம்- கதிர்நாயக்கன் பாளையத்தில் தீப விளக்கு ஏந்தி பெண்கள் ஊர்வலம்...

கோவை:அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கோவையில் பெண்கள் வீடுகளில் தீப விளக்கு ஏற்றி வைத்து பின்னர் விளக்குகளுடன் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.

நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை எதிர்பார்த்த நிலையில் இன்று பிரதமர் தலைமையில் வெகு விமர்சையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள்,பஜனைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கோவை கதிர் நாயக்கன்பாளையம் அண்ணா நகர் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் ராமரை வரவேற்கும் விதமாக வண்ண கோலமிட்டு தீப விளக்கு ஏற்றி  வழிபட்டனர்.தொடர்ந்து ராமர் வேடமிட்ட குழந்தைகளுடன், பெண்கள் கையில் தீப விளக்குகளை ஏந்தியபடி ஊர்வலமாக அப்பகுதியில் உள்ள ராமர் கோவில் வரை சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe