பெரியாரைத் தொட்ட நீ கெட்ட -கோவையில் சீமானுக்கு எச்சரிக்கை விடும் போஸ்டர்...

published 4 days ago

பெரியாரைத் தொட்ட நீ கெட்ட -கோவையில் சீமானுக்கு எச்சரிக்கை விடும் போஸ்டர்...

கோவை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப நாட்களாக தந்தை பெரியார் குறித்து அவதூராக பேசி வருவதற்கு  பலரும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் பெரியாரிய உணர்வாளர்கள், பெரியாரிய அமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சீமானை கண்டிக்கும் விதமாக கோவையில் பல்வேறு இடங்களில், பெரியாரைத் தொட்ட நீ கெட்ட... தன்மானமும், சுயமரியாதையும், பெண்மையும், சமதர்மமும் சமூக நீதியும் வேண்டும் என விரும்பும் நாங்கள் அனைவரும் பெரியாரோடு நிற்கிறோம்...இதை நீங்கள் விரும்பவில்லை என்றால் Theme partner உடன் போய் நில்லுங்கள் என சீமான் புகைப்படத்துடன், தி.மு.க கோவை மாவட்ட சிங்காநல்லூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அன்சாரியின் பெயரிடப்பட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe