காமாட்சிபுர ஆதினம் மறைவிற்கு தலைவர்கள் நேரில் அஞ்சலி...

published 11 months ago

காமாட்சிபுர ஆதினம் மறைவிற்கு தலைவர்கள் நேரில் அஞ்சலி...

கோவை: கோவை ஒண்டிபுதூர் காமாட்சிபுரம் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி சக்தி பீட ஆதினமாக இருந்து வந்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தரார். 

இதனையடுத்து அவரது உடல் ஆதீன பிரதான மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எண்ணற்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வரா சுப்ரமணியம்,  காமாட்சி புர சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவு அனைத்து இந்துக்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்றார். ஆன்மீகத்தை கடந்து இந்துக்களுக்காக பல்வேறு போரட்டங்களை நடத்தி சுவாமிகள் உள்ளார் என கூறினார். 

ஹிந்து நிறுவன அமைப்பாளர் ராமகோபாலனுடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தார் எனவும் நிறுவன அமைப்பாளர் மரணமடைந்த போது உடன் இருந்து அனைத்து காரியங்களையும் செய்து கொடுத்த சிவலிங்கேஸ்வரர் இந்து முன்னணிக்கு பக்கபலமாக இருந்தவர் எனத் தெரிவித்தார். 

மேலும் இந்து அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஊர்வலத்தில் தைரியமாக  கலந்து கொண்டார் எனத் தெரிவித்த அவர் சுவாமிகளின் மறைவு வருத்தம் அளிப்பதாகவும் இந்த மடம் அவர் செய்து வந்த பணிகளை தொடர்ந்து செய்திட வேண்டும் எனவும் அதற்கு இந்து முன்னணி துணையாக இருக்கும் என தெரிவித்தார்.

 

அதனைத் தொடர்ந்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சுவாமிகளின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாகவும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் ஆன்மீக வளர்ச்சிக்காவும் சமுதாய பணிகளுக்காக பாடுபட்டு மக்கள் மத்தியில் அன்போடு மதிக்க பெற்றவர் உயிரோடு இல்லை என்பது நினைக்க முடியவில்லை என்றும் கூறினார். 

இந்து இயக்கங்களுக்கு சக்தியாக விளங்கியவர் அவர் என தெரிவித்த வானதி சீனிவாசன் இந்துக்களுக்கு எந்த ஒரு இடத்தில் பிரச்சனை என்றாலும் முதல் குரலாக அவரது குரல் ஒலிக்கும் என்றார். மேலும் பாஜக தேர்தலில் நிற்கும்பொழுது எல்லாம் எங்களுக்கு உறுதுணையாகவும் உந்து சக்தியாகவும் விளங்கியவர் எனவும் அவரது மறைவு தங்களுக்கு தாங்க முடியாத  வேதனையை அளிப்பதாகவும் பாஜக மற்றும் இந்துக்கள் சார்பில் அவரது மறைவால் வாடும் பக்தர்கள், அங்காள பரமேசுவரி பீடத்தை சார்ந்த  அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதாகவும் அவர் நம்மை விட்டு மறைந்தாலும்  அவருடைய பரிபூரண ஆசி நம்மிடம் தான் இருக்கிறது என்கிற எண்ணத்தோடு அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe