அதிமுக ஒரு டைட்டானிக் கப்பல் அதை உடைத்துவிட்டார்கள்- கோவையில் நடிகர் செந்தில் பிரச்சாரம்...

published 10 months ago

அதிமுக ஒரு டைட்டானிக் கப்பல் அதை உடைத்துவிட்டார்கள்- கோவையில் நடிகர் செந்தில் பிரச்சாரம்...

கோவை: கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நடிகரும் பாஜக அமைப்பு செயலாளருமான செந்தில் சின்னையம்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய நடிகர் செந்தில்,

அண்ணாமலை பெரிய பணக்காரர் இல்லை, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மோடியுடன் சேர்ந்து என் மண் என் மக்கள் யாத்திரையை நடத்தியுள்ளார். நான் முன்னதாக அம்மா கட்சியில் இருந்தேன் அந்த கட்சி சரியில்லாததால் , நல்ல கட்சி வேண்டும் என பாஜகவுக்கு வந்துவிட்டேன். 

புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவர் அம்மாவும், நல்லா டைட்டானிக் கப்பல் வைத்திருந்தார்கள் , அதை எடப்பாடி எடுத்து ஓட்ட தெரியாமல் ஓட்டி பாறையில் முட்டி சுக்கு நூறாக ஆக்கிவிட்டார்.அதேபோல கட்சியையும் உடைத்து எறிந்து விட்டார்கள்.

கச்சத்தீவை மோடி கையில் எடுத்துள்ளார். இந்தியா நல்லா நன்றாக இருக்க வேண்டும் என்றால் அது மோடி வந்தா தான் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/cO-1GJBWpH0?si=PwTIExR4g0Z4xt6S

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe