கோவையில் காட்டுபன்றி மோதலை கட்டுப்படுத்த முகாம்...

published 1 day ago

கோவையில் காட்டுபன்றி மோதலை கட்டுப்படுத்த முகாம்...

கோவை: தமிழ்நாட்டில் மனித - காட்டுப்பன்றி மோதலை குறைப்பது தொடர்பாக காட்டுபன்றிகளை சுடுவதற்கு தமிழக அரசு ஆணை வெளியிட்டு இருக்கிறது.

இதனை அடுத்து வனத் துறையில் பணி புரியும் முன்னணி வனப் பணியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி, தமிழ்நாடு வன உயிர் பயிற்சியகம், கோவையில் இன்று நடைபெற்றது. இந்த பயிற்சியை சென்னை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் துறை தலைவர்,  சீனிவாச  ரெட்டி, தலைமை தாங்கி  தொடங்கி வைத்தார்.

முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர், ராக்கேஷ் குமார் தோக்ரா, காட்டுப் பன்றிகளின் தற்போதைய நிலவரம் குறித்தும், அதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து. இந்த பயிற்சியை துவங்கி வைத்தார்.

இதில் வனப் பகுதியில் இருந்து மூன்று கிலோ மீட்டருக்கு வெளியே இருக்கும் காட்டு பன்றிகளை சுடுவதற்கும் மற்றும் அதை எவ்வாறு அப்புறப்படுத்த (dispose) வேண்டும் என்றும், வனப் பகுதியில் இருந்து வெளியே இருந்து 3 கிலோ மீட்டர்க்கு உள்ளே இருக்கும் காட்டு பன்றிகளை எவ்வாறு பிடித்து மீண்டும் அதை வனப்பதியில் விட வேண்டும் என்றும் பயற்சி வழங்கப்பட இருக்கிறது. இதில் முக்கியமாக காவல் துறை மற்றும் STF அலுவலர்கள் துப்பாக்கி சுடுதல் தொடர்பான பயிற்சி மற்றும் கடைபிடிக்க வேண்டிய விதிகளை பற்றி பயிற்சி கொடுக்க இருக்கிறார்கள். பின்னர் இவர்களை மதுக்கரை சூட்டிங் ரேஞ்ச் பகுதிக்கு அழைத்து சென்று துப்பாக்கி சுடுதல் தொடர்பான பயிற்சியும் வழங்கப்பட இருக்கின்றது.

இந்த பயிற்சியில் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் இயக்குனர், தமிழ்நாடு வன உயிர் பயிற்சியகம், கோவை, சேவாசிங் தலைமை வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர், ஆனைமலை புலிகள் காப்பகம், வெங்கடேஷ், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், திருப்பூர் துணை இயக்குனர்  தேவேந்திர குமார் மீனா, வன கால்நடை மருத்துவர்கள் மனோகரன் (ஓய்வு), கலைவாணன், சதாசிவம் மற்றும் அனைத்து மண்டலங்களில் இருந்து பயிற்சிக்கு வந்த 91 வனவர்கள் மற்றும் வனக் காப்பாளர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe