கோவையில் பதிவான வாக்கு சதவீதம் வெளியீடு...

published 10 months ago

கோவையில் பதிவான வாக்கு சதவீதம் வெளியீடு...

கோவை: 2024 மக்களவைத தேர்தல் இன்று காலை 7 மணி முதல் துவங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. கோவை மக்களவைத் தொகுதியிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கிய மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 

கோவை மக்களவைத் தொகுதியில் 2059 வாக்குச்சாவடிகளில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவு சதவிகிதம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கோவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 64.42% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. சட்டமன்ற தொகுதிகள் விவரங்களின்படி சூலூர் சட்டமன்ற தொகுதியில் 75.33%, கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 66.42%, கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் 58.74%, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 59.25%, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 59.33%, பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 67.42% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe