அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் முகவரிகள் குறித்து ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் குற்றச்சாட்டு- காரணம் என்ன?...

published 1 day ago

அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் முகவரிகள் குறித்து ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் குற்றச்சாட்டு- காரணம் என்ன?...

கோவை: ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சவுடமுத்து என்பவர் அரசு அலுவலகங்களில் மின்னஞ்சல் முகவரிகள் முறையாக பயன்படுத்தவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.  

 

இது குறித்து அவர் கூறுகையில், அரசு அலுவலகங்களில் புகார் மனுக்கள் அளிக்கவும்,  தகவல்களை பெற்று வாங்குவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகள் சம்பந்தப்பட்ட துறையின் இணையதள பக்கத்தின் அடிப்படையில் தான் மின்னஞ்சல் இருக்க வேண்டும் என்பது அரசு பிறப்பித்தது.

ஆனால் பெரும்பாலான அரசு அலுவலங்களில் gmail, yahoo போன்ற தனியார் மின்னஞ்சல்கள் பயன்பாட்டுக்கு உள்ளதாகவும் இது மிகவும் தவறானது ஒன்றும் எனவும் கூறிய அவர் இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் அளிக்கும் புகார்கள் முறையாக பதிவு செய்யப்படாதது. விசாரணைக்கு உட்படுத்தாமல் இருப்பதற்கும் காரணம் என தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு அரசுடைய விதிகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe