கோவையில் கனிம வள கொள்ளையில் ஈடுபட்ட ஏழு லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்…

published 9 months ago

கோவையில் கனிம வள கொள்ளையில் ஈடுபட்ட ஏழு லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்…

கோவை: கோவை மாவட்டம், வடக்கு தாலுகாக்கு உட்பட்ட கூடலூர் நகராட்சி மலை தளப் பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். இந்தப் பகுதியில் கட்டாந்தி மலை அடிவாரம், செல்வபுரம் வடக்கு பகுதியில் உள்ள வினோபா தான பூமியில் சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்கள் இன்று அதிகாலை ஏழு டிப்பர் லாரிகள் மற்றும் இரண்டு ஜே.சி.பி எந்திரங்கள் மூலமாக சட்டத்துக்கு புறம்பாக கனிம வளங்களை தோண்டி எடுத்துக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

அதனை அங்கு உள்ள கட்டாந்தி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் அந்த லாரிகளை சிறை பிடித்து வருவாய்த்துறை, காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து காவல் துறையினர் அங்கு ரோந்து வாகனத்தை கொண்டு வந்து தடுத்து நிறுத்தி லாரிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். 
மேலும் கடந்த தேர்தல் நாள் அன்று சட்ட விரோதமாக கனிம வளம்  கொள்ளை அடிக்கப்பட்டது. 

உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி கனிம வள கொள்ளையை  வருவாய்த் துறை மற்றும் கனிம வளத்துறை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை, யானைகள் வழித் தட பாதையில் நடக்கும் கனிம வளக் கொள்ளை  வனத் துறையினர் தடுத்து நிறுத்தவில்லை எனவும் அந்த கட்டாந்தி மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe