விகடன் இணையதளம் முடக்கம்: முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

published 4 days ago

விகடன் இணையதளம் முடக்கம்: முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

கோவை: பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த கார்ட்டூன் படத்திற்காக விகடன் இதழின் இணையதளம் முடக்கப்பட்டதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடுகடத்தப்படுவதைப் பற்றிய விவகாரத்தில் பிரதமர் மோடி எந்தவித கண்டனமும் தெரிவித்தில்லையென விமர்சித்து விகடன் இதழ் ஒரு கார்ட்டூன் வெளியிட்டது.

இந்த கார்ட்டூனில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில், பிரதமர் மோடி கை மற்றும் கால்களில் விலங்கிடப்பட்டு இருப்பது போன்ற சித்தரிப்பு இருந்தது. இதற்கு பா.ஜ.க ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மத்திய சட்ட அமலாக்கத்துறை விகடன் இணையதளத்தை முடக்கியது. இந்த நடவடிக்கை ஊடகத்துறையிலும், கருத்துச் சுதந்திர ஆதரவாளர்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ஊடகச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முற்படுகிறது என்றும் ஜனநாயகத்தின் முக்கிய ஆதாரமான ஊடகங்களை ஒடுக்குகிறது என்றும் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், விகடன் இணையதளத்தின் முடக்கத்துக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் @vikatan-னின் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்.."

இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe