சென்னையை மிஞ்சுமாம் வெப்பம்! சென்னை, கோவை, மதுரையில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

published 9 months ago

சென்னையை மிஞ்சுமாம் வெப்பம்! சென்னை, கோவை, மதுரையில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

கோவை: கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் இந்த வாரம் சென்னையை விட அதிக வெப்பம் வாட்டி வதைக்கப்போகிறது; இந்த கோடை முழுவதும் நமக்கு இதே நிலை தான் போல.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பத்தை கோவை மக்கள் எதிர்கொண்டு வருகிறோம். மதுரை பங்காளிகளும் இந்தாண்டு சுட்டெரிக்கும் வெயிலில் தவித்து வருகின்றனர்.

குழந்தைகளுக்கு லீவ் விட்டும் எந்த பயனும் இல்லை என்பது போல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் தொடர்கிறது. வெப்பத்தை தாங்க முடியாமல் பெரியவர்கள் வெளியில் தலைகாட்டுவதே இல்லை.

இதனிடையே இந்த வாரம் கோவை, சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் வானிலை எப்படி இருக்கும் என்பதை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் நாளை முதல் வரும் மே6ம்

 தேதி தேதி வரை குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 38 டிகிரி செல்சியசில் வரை வெப்பம் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, குறைந்தது 82 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்து அதிகபட்சமாக 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகுமாம்.

கோவையில் நாளை முதல் வரும் மே4ம் தேதி தேதி வரை குறைந்தபட்சம் 26டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 41 டிகிரி செல்சியசில் வரையும், மே 5,6 ஆகிய தேதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, குறைந்தது 79 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்து அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகுமாம்.

இதேபோல், மதுரையில் நாளை முதல் வரும் 4ம் தேதி வரை குறைந்தபட்சம் 29 டிகிரி முதல் அதிகபட்சம் 42 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்றும், மே5,6 தேதிகளில் மாவட்டத்தில் 41 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe