குனியமுத்தூரில் வீடுபுகுந்து இளம் பெண்ணிடம் செயின் பறித்த முகமூடி கொள்ளையன்!

published 9 hours ago

குனியமுத்தூரில் வீடுபுகுந்து இளம் பெண்ணிடம் செயின் பறித்த முகமூடி கொள்ளையன்!

கோவை: கோவையில் முகமூடி கொள்ளையன், ஐ.டி. பெண் ஊழியரின் வீடு புகுந்து அவரது தாலி செயினை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குனியமுத்தூர் அருகே உள்ள திருநாவுக்கரசர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த பிரசாத். இவர் சுங்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி பிருந்தா பென்னெட் (வயது 29). இவர் சென்னையில் உள்ள ஐ. டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலையை பார்த்து வந்தார்.

நேற்று காலை கணவர் வேலைக்கு சென்று விட்டார். பிருந்தா வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்து லேப்டாப் மூலம் அலுவலக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரது மாமியார் வெளியில் சென்று தண்ணீர் பிடிக்க சென்றிருந்தார்.
அப்போது திடீரென வீட்டிற்குள் டி-ஷர்ட் பேண்ட் அணிந்த டிப்டாப் வாலிபர் உள்ளே புகுந்தார். அவரது முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தார்.

பிருந்தா அதிர்ச்சியுடன் அவரிடம் யார் நீ என்று கேட்பதற்குள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன்  தாலி செயினை பறித்தார். 
இதனால் பிருந்தா சத்தம் போட்டார். உடனே அந்த வாலிபர் தாலி செயினுடன் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe