விடுதலை 2: சம்பள பாக்கி பிரச்சனை... துணை நடிகர்கள் குற்றச்சாட்டு!

published 9 months ago

விடுதலை 2:  சம்பள பாக்கி பிரச்சனை... துணை நடிகர்கள் குற்றச்சாட்டு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன், கௌதம் மேனன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை திரைப்படம்  வரவேற்பை பெற்றது.   இந்த நிலையில் விடுதலை - 2 படப்பிடிப்பு  தற்போது நடைபெற்று வருகிறது.

90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  மீதமுள்ள காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். படத்தின் காட்சிகள் தற்போது தென்காசி சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று வருகிறது.

Vetrimaaran's 'Viduthalai 2' postponed again | Tamil Movie News - Times of  India

இந்நிலையில் விடுதலை 2 திரைப்படத்தில் நடித்த ஊர் மக்களுக்கு சரியான சம்பளத்தை படக்குழுவினர் கொடுக்கவில்லை என்ற பரபரப்பு குற்றச்சாட்டை தென்காசி பகுதி மக்கள் தற்போது முன்வைத்துள்ளனர்.

Vetri maaran viduthalai movie part 1 and part 2 shooting wrapped vijay  sethupathi soori | Galatta

இந்த நிலையில், அந்த படத்தில் நடித்த துணை நடிகர்கள் சிலர் தென்காசி ரயில் நிலையம் முன்பு மிகுந்த சத்தத்துடன் தங்களுக்கு முறையான ஊதியம் வழங்காததை கண்டித்து பிரச்சனையில் ஈடுபட்டனர்.

Viduthalai 2 shoot resumes

விடுதலை - 2 படத்தில் நடிக்க வந்ததாகவும், நாள் ஒன்றுக்கு ரூ.500 விதம் சம்பளம் பேசி தங்களுக்கு முறையான ஊதியம் வழங்காமல் ரூ.350 கொடுத்து அனுப்பி வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.  தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இந்த விவகாரத்தை கண்டு கொள்ளவே இல்லை எனவும்  விடுதலை 2 படத்தில் நடித்த துணை நடிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe