கோவையில் பெட்ரோல் திருடும் சிறுவர்கள் - சி.சி.டி.வி காட்சிகள் வைரல்…

published 1 week ago

கோவையில் பெட்ரோல் திருடும் சிறுவர்கள் - சி.சி.டி.வி காட்சிகள் வைரல்…

⁠⁠⁠⁠⁠கோவை : கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்களின் திருட்டு அதிகரித்து வரும் நிலையில், கோவை உக்கடம் பகுதியில் இரவு நேரங்களில் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடும் சி.சி.டி.வி காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் அதில் பெட்ரோல் திருடும் , சிறுவர்கள் மேலும் திருட கற்றுக் கொண்டால் இருசக்கர வாகனங்கள் முதல் அனைத்து திருட்டு சம்பவங்களையும் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் காவல் நிலையத்தில் அவர்கள் மீது புகார் கூறி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மீண்டும் இதே போன்று திருட்டு சம்பவங்களில் ஈடுபடாமல் சிறுவர்களை நல்வழிப்படுத்த முடியும் என அதில் பதிவு செய்து உள்ளனர். இதுகுறித்து உக்கடம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

மேலும் கடந்த சில மாதங்களாகவே இருசக்கர வாகனங்கள், தலைக் கவசம், வாகனங்களின் உதிரி பாகங்கள் திருடு போவது தொடர்ந்து நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமும், அதிர்ச்சியும் அடைந்த வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்...

https://www.facebook.com/share/r/1F3WThAckU/

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe