கோவை, திருப்பூர், நீலகிரியில் கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க ஆய்வுக்கூட்டம்...

published 9 months ago

கோவை, திருப்பூர், நீலகிரியில் கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க ஆய்வுக்கூட்டம்...

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் முன்னிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் அவர்கள், கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட 1 நகராட்சி, 11 பேரூராட்சிகள், திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி. 5 நகராட்சிகள், 15 பேரூராட்சிகள் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு எவ்வித தங்கு தடையுமின்றி குடிநீர் கிடைத்திடும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


மேலும், இப்பகுதிக்கான அணைகளின் நீர்மட்டம், நீர் இருப்பு மற்றும் நீர்
வெளியேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், புதிதாக ஆழ்குழாய்
அமைக்கவும் மற்றும் பழுதடைந்த ஆழ்குழாய் கிணறுகளை சரிசெய்யவும் மற்றும்
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் பயன்பெறும்
வகையில் தேவையான இடங்களில் தண்ணீர் பந்தல் கூடுதலாக அமைத்திடவும்
மற்றும் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல்களை முறையாக
கண்காணித்திடவும் மற்றும் தண்ணீர் பந்தல்களை சுகாதாரமாக வைத்திடவும்
அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், கோடை வெயிலின் தாக்கம் குறித்து கோடை வெயிலில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாநகராட்சி துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், தலைமை பொறியாளர்கள், நகராட்சி
ஆணையர்கள்
மண்டல இயக்குநர்கள்(நகராட்சி
நிர்வாகம்), உதவி
இயக்குநர்கள்(பேரூராட்சிகள்), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள்
உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe