கோவையில் ஆம்னி பேருந்தில் பெண் ஐடி ஊழியர் ‘திடீர்’ சாவு…

published 9 months ago

கோவையில் ஆம்னி பேருந்தில் பெண் ஐடி ஊழியர் ‘திடீர்’ சாவு…

கோவை: சென்னையில் இருந்து கோவை வந்த தனியார் ஆம்னி பேருந்தில் பயணித்த இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை பகுதியை சேர்ந்தவர் கார்மேகம். இவரது மகள் மகாலட்சுமி(23). சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து நேற்று இரவு மகாலட்சுமி சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து மூலம் கோவை புறப்பட்டார். நேற்று காலை பேருந்து கோவை காந்திபுரம் பஸ் நிலையம் வந்தது. ஆனால் பேருந்தின் படுக்கையில் பயணம் செய்த மகாலட்சுமி எழுந்திருக்கவில்லை. பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரிடம் காந்திபுரம் வந்த தகவலை கூற சென்றபோது, அவர் உடல் அசைவின்றி படுத்திருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். 

உடனே அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகாலட்சுமியை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த காட்டூர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் பேருந்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி சக ஊழியர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe