கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மேலும் ஒரு சாதனை...

published 2 days ago

கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மேலும் ஒரு சாதனை...

கோவை: கோவை அரசு மருத்துவமனையின் இருதயவியல் துறையில், தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக CRT-D எனப்படும் அதி நவீன பேஸ்மேக்கர் சிகிச்சை அளித்து வெற்றி அடந்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையின் இருதயவியல் துறையில் தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக CRT-D எனப்படும் கார்டியாக் ரீசின்க்ரோனைசேஷன் தெரபி டிஃபிபிரிலேட்டர் (Cardiac Resynchronization Therapy Defibrillator) கருவி இதய நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் திருப்பூரை சேர்ந்த சரவணகுமார்(54) என்பவர் வென்ட்ரிகுலர் டாக்கிகார்டியா (ventricular tachycardia) எனப்படும் சீரற்ற இருதயதுடிப்பு காரணமாக தீவிர சிகச்சைப் பிரிவில் (ICCU) அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு உடனடியாக ஷாக் ட்ரீட்மென்ட் (Cardiac defibrillation) கொடுத்து அவருடைய உயிரை காப்பாற்றினர்.

மேலும் அவருடைய நோயிற்கான காரணத்தை ஆராய்ந்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இது போன்ற சீரற்ற இருதயதுடிப்புடன் பல முறை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்தனர். இதன் விளைவாக அவருக்கு இருதய செயலிழப்பு (cardiac failure) ஏற்பட்டுள்ளதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்த சீரற்ற இருதயதுடிப்பை சரிசெய்ய மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அவருக்கு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதயமுடுக்கி (PACEMAKER) கருவி பொருத்தப்பட்டது.

இவ்வாறு இதயமுடுக்கி (PACEMAKER) கருவி பொருத்தப்பட்ட பின்னரும், சீரற்ற இருதயதுடிப்பு மற்றும் இருதய செயலிழப்போடு அவதிபட்டுவந்த அவருக்கு CRT-D எனப்படும் அதி நவீன கருவியை பொறுத்த இருதவியல் துறை மருத்துவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி CRT-D கருவி வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe