தமிழகத்தில் இடைத்தேர்தலை எப்படி அராஜகமாக நடத்துகிறார்கள் என்பதை பார்த்து கொண்டிருக்கிறோம்- வானதி சீனிவாசன் கோவையில் பேட்டி...

published 8 months ago

தமிழகத்தில் இடைத்தேர்தலை எப்படி அராஜகமாக நடத்துகிறார்கள் என்பதை பார்த்து கொண்டிருக்கிறோம்- வானதி சீனிவாசன் கோவையில் பேட்டி...

கோவை: தமிழகத்தில் இடைத்தேர்தலை எப்படி அராஜகமாக நடத்துகிறார்கள் பணபலத்தையும் அதிகார பலத்தையும் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் எனவும் இதையும் மீறி மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் போட்டியிடுகிறது எனவும் பாஜக மகளிர் மீது தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர், தமிழகத்தின் இடைத்தேர்தல் என்பது எப்படி அராஜகமாக நடத்துகிறார்கள் பணபலத்தையும் அதிகார பலத்தையும் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் எனவும் இதையும் மீறி மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் போட்டியிடுகிறது எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.

அதிமுக ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு அவர்களே காரணத்தை சொல்லட்டும் என்றும் 2026 தேர்தலில் எந்த கட்சி எப்படி ஓட்டு வாங்க போகிறது என்பதை மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள் என்றும் கூறியதுடன், ஒவ்வொருவரும் அவர்கள் எதிர்பார்ப்பை சொல்லிக் கொண்டிருக்கலாம் ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வரக்கூடிய இரண்டு ஆண்டு காலம் மக்கள் பணி செய்து ஒரு வெற்றி முகமான கூட்டணியாக மாறப்போவதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

தற்போது  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட தேசிய ஜனநாயக கூட்டணி எங்கள் கூட்டணி வேட்பாளர் நிற்பதற்காக ஆதரவு கொடுத்து தேர்தலில் கடுமையாக பணியாற்ற போகிறோம் என்றும் தேர்தல் என்பது ஒவ்வொரு அரசுக்கும் கட்சிக்கும் மக்கள் எப்படி மதிப்பீடு கொடுக்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டுதான் என்றாலும் இந்த தேர்தலில் நாங்கள் தைரியமாக போட்டியிடுகிறோம் மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதுதான் தகவல் என்றும் சுட்டிக்காட்டினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe