கடலோர படையில் வேலை: 320 பணியிடங்கள்... எப்படி விண்ணப்பிப்பது?

published 8 months ago

கடலோர படையில் வேலை: 320 பணியிடங்கள்... எப்படி விண்ணப்பிப்பது?

இந்திய கடலோர காவல்படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேவிக் மற்றும் யான்ட்ரிக் பதவிக்கான 320 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலிப்பணியிடங்கள் - 320

நேவிக் (General Duty) - 260,  யான்ட்ரிக் (Mechanical) - 33, யான்ட்ரிக் (Electrical) - 18, யான்ட்ரிக் (Electronics) - 9

கல்வி

நேவிக் பணிக்கு  -  12ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

யான்ட்ரிக் பணிக்கு  -  10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலெக்ட்ரிக்/மெக்கானிக்கல்/எலெக்ட்ரானிக்கஸ்/தகவல் தொடர்பியல் ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். (முழு தகவலுக்கு அறிவிப்பை படித்து பார்க்கவும்)

தேர்வு

கணினி வழி எழுத்து தேர்வு,  உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு, இறுதி மருத்துவ பரிசோதனை ஆகியவை  நடைபெறும். இதில் தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது?  

https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள  விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்க கடைசி நாள் 03.07.2024ஆகும்.

கூடுதல் விவரம்

இந்த பணியிடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கு https://joinindiancoastguard.cdac.in/cgept/assets/img/news/CGEPT01-2025adv.pdf என்ற அறிவிப்பை படிக்கவும். அறிவிப்பை நன்கு படித்து விட்டு விண்ணப்பிக்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe